இலங்கையில் மீண்டும் குடும்ப ஆட்சிக்கு இடமளிக்க கூடாது – குமார் சங்கக்கார

இலங்கையில் மீண்டும் ஊழல், உறவுமுறை மற்றும் குடும்ப ஆட்சிக்கு இடமளிக்கக் கூடாது என இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

“அதிக விழிப்புணர்வோடும் துணிச்சலோடும் ஒரு தலைமுறையினரால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இத்தருணத்தில், இலங்கையர்கள் ஒன்றிணைந்து இந்த நெருக்கடியிலிருந்து பாடம் கற்றுக்கொள்வார்கள்.

இனவாத அல்லது மதப் பிளவுகள் சமூகத்திலோ அல்லது அரசியலிலோ மீண்டும் பிரவேசிக்க இடமளிக்காது என நான் நம்புகிறேன். அத்துடன் ஊழல், உறவுமுறை அல்லது குடும்ப ஆட்சியை மீண்டும் இலங்கையில் அனுமதிக்கக் கூடாது.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleஎரிபொருள் விநியோகத்தில் இனி இவ்வாறான நடைமுறைகள் தடை !
Next articleஜனாதிபதிக்கு எதிராக களமிறங்கிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்