ஜனாதிபதிக்கு எதிராக களமிறங்கிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் இன்றையதினம் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

அம்பலாங்கொட பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறையால் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை என சுற்றுலாப் பயணிகள் இதன்போது தெரிவித்துள்ளனர்.

Previous articleஇலங்கையில் மீண்டும் குடும்ப ஆட்சிக்கு இடமளிக்க கூடாது – குமார் சங்கக்கார
Next articleகொழும்பில் அரசுக்கெதிரான ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட புதுமணத் தம்பதியினர்