கொழும்பில் அரசுக்கெதிரான ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட புதுமணத் தம்பதியினர்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக நாடளாவிய ரீதியில் அரசுக்கெதிரான பொதுமக்களின் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில் கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட அஹிம்சை வழியிலான போராட்டம் இந்த நிமிடம் வரை அதே உத்வேகத்துடன் தொடர்ந்து வருகின்றது.

கோட்டாபய ராஜபக்சவை வீட்டிற்கு அனுப்பும் வரை எமது போராட்டம் தொடரும் என கோஷம் எழுப்பி ஒன்று கூடியவர்கள், மழை, வெயில் என எதையும் பொருட்படுத்தாது தற்சமயம் வரை துணிந்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில் இன்றைய போராட்டக் களத்தில், புதுமண தம்பதியினர் இருவர் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

திருமணம் முடிந்தவுடன் நேரடியாக போராட்டக் களத்தில் கலந்து கொண்டு போராட்டத்தை தொடர்ந்துள்ளனர் குறித்த தம்பதியினர்.

Previous articleஜனாதிபதிக்கு எதிராக களமிறங்கிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
Next articleயாழில் மலேரியா நோயாளி ஒருவர் அடையாளம்