நீர்வீழ்ச்சியில் குளிக்கச்சென்ற மூவர் மாயம்

இறம்பொடை நீர்வீழ்ச்சியில் குளிக்கச்சென்ற மூவர் மாயமாகியுள்ளதாக தெரியவந்துள்ளதையடுத்து
பொலிஸ் மற்றும் உயிர் காக்கும் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களே இவ்வாறு காணாமல்போயுள்ளனர்.

நுவரெலியாவுக்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த இவர்கள், வவுனியாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, ​​இன்று (12) பிற்பகல் றம்பொடை நீர்வீழ்ச்சிக்கு நீராடச் சென்றுள்ளனர்.

இதன்போது திடீரென நீரின் வேகம் அதிகரித்தமையினால், 07 பேர் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதுடன், அவர்களில் நால்வர் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன மேலும் மூன்று இளைஞர்களைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸ் உயிர் காக்கும் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

றம்பொடை நீர்வீழ்ச்சியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இன்று பெய்த கனமழை காரணமாக ரம்பொட நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் திடீரென அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleகொழும்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு விடுக்கபட்டுள்ள முக்கிய எச்சிரிக்கை
Next articleவவுனியாவில் மேற்கொள்ளபட்ட அரசுக்கெதிரான போராட்டம்