பதுளையில் 19 வயது இளைஞனின் விபரீத முடிவு!


பதுளை கெந்தகொல்ல யோதுன் உள்பத்த பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞன் நேற்று மாலை கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆர்.எம். பசிது மஹேஷ் என்ற இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். வீட்டுக்கு அருகில் உள்ள காட்டில் ஒரு மரத்தில் கயிறு ஒன்றை பயன்படுத்தி கழுத்தில் சுருக்கிட்டு இந்த இளைஞன் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பாக பதுளை மற்றும் கஹடருப்ப பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழில் காதலி உயிரிழந்ததையடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட பல்கலைக்கழக மாணவன்
Next articleவவுனியாவிலிருந்து சுற்றுலா சென்று நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர், யுவதியினை தேடும் பணி நிறுத்தம்!!