நண்பனை கத்தியால் குத்திய நபர் கைது!


ஹொரணை பிரதேசத்தில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்த நபர் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். 

இன்று (13) காலை மது அருந்திய போது ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் ஹிக்கடுவ, வெல்வத்த பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காலியைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேகநபர் ஹொரணை வைத்தியசாலையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Previous articleயாழில் உயிரிழந்த சிறுவன் அஜித்தன் அபிநயனின் விபத்தில் முறையான விசாரணை கோரி கவனயீர்ப்பு போராட்டம்
Next articleஇன்றைய ராசிபலன் : 14.04.2022