யாழ். பகுதியில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பு சம்பவம்


யாழ்ப்பாணம் மாவட்டம் வடமராட்சி – கரவெட்டி பிரதேசத்தில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது.

இந்த சம்பவம் இன்று (13-04-2022) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து சம்பவம், கரவெட்டி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கரணவாய் ஜே/350 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்றுள்ளது,

குறித்த சம்பவம் சமையல் ஈடுபட்டிருந்த போது மேற்படி அடுப்பு வெடித்தாக தெரிவிக்கப்படுகிறது.

அச்சமயம் அருகில் எவரும் இல்லாத நிலையில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.

இச்சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Previous articleநாட்டுமக்களுக்கு ஜனாதிபதி சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
Next articleஜேர்மனியில் விபத்தில பலியான யாழ் இளைஞன்