ஜேர்மனியில் விபத்தில பலியான யாழ் இளைஞன்ஜேர்மனியில் இடம் பெற்ற கார் விபத்தில் யாழ்ப்பாணம் நீர் வேலிப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது. திருமணம் செய்து குடும்பத்துடன் வசித்து வந்ததுடன், குழந்தை பிறந்து எட்டு மாதங்கள் ஆன நிலையில் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் ஜெயராசா ரொமேஸ் (வயது -31) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார். சம்பவம் தொடர்பாக ஜேர்மனி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழ். பகுதியில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பு சம்பவம்
Next articleஆர்ப்பாட்டக் களத்தில் கொண்டாடபட்ட புத்தாண்டு