நான் ஒரு போதும் பதவிவிலகமாட்டேன்; ஜனாதிபதி அதிரடி!ஒரு போதும் தாம் பதவிவிலகப்போவதில்லை என பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

நேற்று சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரிகள் ஜனாதிபதியை சந்தித்தவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.அத்துடன் ,   அரசமைப்பிற்கு உட்பட்ட வகையிலேயே தான் செயற்பட்டுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம்  புதிய அமைச்சரவை எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை சத்தியப் பிரமாணம் செய்ய உள்ளதென அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.  

எனினும்   பஸில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச,, நாமல் ராஜபக்ச, மற்றும் சஷிந்திர ராஜபக்ச ஆகியோர் அமைச்சரவையில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் எனவும் தெரியவருகின்றது. பிரதமர் பதவியில் மஹிந்த நீடிப்பார். ஜனாதிபதியும் பதவி விலகப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

அதேவேளை ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி  காலி முகத்திடலில் பொதுமக்கள் இன்று  8 ஆவது நாளாகவும்  ஜனாதிபதிக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் நாய் மற்றும் பூனையின் நக கீறலுக்கு உள்ளாகியதில் வந்த நோயினால் 3 பிள்ளைகளின் தந்தை பலி!
Next articleதொழில்சாலையை பார்வையிட சென்ற தந்தை மற்றும் மகனுக்கு நேர்ந்த சோகம்