தொழில்சாலையை பார்வையிட சென்ற தந்தை மற்றும் மகனுக்கு நேர்ந்த சோகம்


பட்டதுவையிள்ள பிரபலமான தொழிற்சாலையொன்றின் தண்ணீர் தாங்கியில் விழுந்து இருவர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுவருட விடுமுறைக்காக தொழிற்சாலை மூடப்பட்ட பின்னர் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அதிகாரிகள் மாறி மாறி வந்து தொழிற்சாலையை ஆய்வு செய்வது வழக்கம்.

அந்தவகையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிகாரிகள் சிலருக்கு இந்தக் கடமை ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதன்படி குறித்த அதிகாரி நேற்று வந்தபோது அவரது 9 வயது மகனும் அவருடன் வந்துள்ளார்.

காலை 10.30 மணிக்கு தொழிற்சாலைக்குள் நுழைந்த அந்த அதிகாரியும் மகனும் 2.00 மணியாகியும் வெளியே வராத காரணத்தால் தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை தேடிப் பார்த்துள்ளனர்.

இதன்போது இயந்திரங்களை குளிர்விக்க தண்ணீரைப் பெற்றுக் கொள்ளும் தண்ணீர்த்தாங்கியில் விழுந்து தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து இருவரையும் தண்ணீர்த்தாங்கியிலிருந்து வெளியே எடுத்து கராபிட்டிய வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றபோது அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவத்தில் அக்மீமன தல்கம்பல பிரதேசத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.