தம்புள்ளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு பாடசாலை மாணவர்கள் பலி


தம்புள்ளை – வேமெடில்ல நீர்த்தேக்கத்தின் வான் கால்வாயில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளொன்று பாய்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.

இந்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரே மோட்டார் சைக்கிளில் நான்கு நண்பர்கள் பயணித்துள்ள நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் 16 வயதுடைய இரண்டு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவரும் படுகாயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleபதவி விலகுவதா இல்லையா என இறுதித் திட்டத்தை அறிவித்தார் கோட்டபாய!
Next articleதிடீரென நள்ளிரவில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை: வெளியானது அறிவிப்பு