யாழில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட தீப்பந்த போராட்டம்யாழில் ஜனநாயகத்துக்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் தீப்பந்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டமானது யாழ். பண்ணைக் கடற்கரையில் அமைதியாக முறையில் இன்று தீப்பந்தம் ஏந்தி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – காலிமுகத்திடலில் “கோட்டா வீட்டுக்குப் போ” என்ற கோஷத்துடன் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் தன்னெழுச்சிப் போராட்டம் 9ஆவது நாளாகவும் இன்று தொடர்கின்றது. அதற்கு ஆதரவாகவே இப்போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்குப் பொறுப்பேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச உள்ளடங்கலாக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து ராஜபக்‌ச குடும்ப உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு இடம்பெறும் இந்தப் போராட்டத்தில் பல தரப்பினரும் கலந்துகொண்டு தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். இதனால் போராட்டம் நாளுக்குநாள் வலுப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் உறக்கத்தில் இறந்த சிறுமியை உடற்கூற்றுப் பரிசோதனை செய்கையில் 2 மாத கர்ப்பம் !
Next articleபுதிய அமைச்சரவை பதவியேற்பு நாட்டின் நிலமை மோசமடையலாம் விடுத்த எச்சரிக்கை!