புதிய அமைச்சரவை பதவியேற்பு நாட்டின் நிலமை மோசமடையலாம் விடுத்த எச்சரிக்கை!


புதிய அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பதன் மூலமே தற்போதைய நெருக்கடி நிலைமை மோசமடையும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகள் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தினுள் இருந்து மற்றொரு குழு அமைச்சுப் பதவிகளை கைப்பற்றுவது மக்களை மேலும் கிளர்ச்சியடையச் செய்யும்.

அமைச்சுக்களை மாற்றுவதும் அமைச்சர்களை மாற்றுவதும் தற்போது மக்கள் கோரும் ஒன்றல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

தற்காலிக நடவடிக்கைகளை பொதுமக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும், எனவே பொதுமக்கள் தெரிவிக்கும் பிரச்சினைகளை அரசாங்கம் கேட்டு உரிய முடிவுகளை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை இன்று முற்பகல் புதிய அமைச்சரவை ஒன்று பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Previous articleயாழில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட தீப்பந்த போராட்டம்
Next articleஉறங்கிக் கொண்டிருந்த தந்தையை தாக்கி கொலை செய்த மகன் கைது