ஜனாதிபதி செயலாளரின் வீட்டின் முன் டயர்கள் எரித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்மாத்தறை – ஹக்மன நகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹக்மன கெபிலியபொலவில் உள்ள ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹக்மன நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் பெலியத்த வீதி வழியாக கெபிலியபொல கபிலியபொலவில் உள்ள ஜனாதிபதியின் செயலாளரின் வாசஸ்தலமான அலவத்த இல்லத்திற்குள் நுழைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் வீட்டின் நுழைவாயிலில் டயர்களை எரித்து, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலாளரின் வீட்டின் முன் டயர்கள் எரித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
Previous articleரம்புக்கனை விவகாரத்திற்கு பொறுப்பேற்று பாதுகாப்பு அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும் – சாணக்கியன் கோரிக்கை
Next articleநீதியின் முன் நிறுத்தாமல் வன்முறையை கையிலெடுத்த பொலிசார் வெட்கப்பட வேண்டும் : சீற்றமடைந்த மஹேல