போராட்டங்கள் தீவிரமாவதால் களமிரங்கும் படையினர்கள்!



தேவை ஏற்படின் எரிபொருள் புகையிரதங்களுக்கு இலங்கை விமானப்படை பாதுகாப்பு வழங்கும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் எரிபொருள் பவுஸர்களுக்கு இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்குவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக சமூக மற்றும் அரசியல் பரப்பில் பாரிய அதிர்வலைகள் ஏற்பட்டுள்ள நிலையில்  இலங்கையின் நிலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. 

தினமும் நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் நேற்றையதினம் ரம்புக்கனை பிரதேசத்தில் எரிபொருள் தாங்கிய பௌருக்கு தீ வைக்க முற்பட்டனர் என தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் 10இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கையில் மாத்திரம் அல்லாது சர்வதேச ரீதியில் கடும் கண்டணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.