பரீட்சைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

முன்னதாக திட்டமிட்டப்படி அடுத்த மாதம் 23ஆம் திகதி கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் 23ஆம் திகதி முதல் ஜூன் 1ஆம் திகதி வரை இந்த பரீட்சைகள் இடம்பெறும் எனவும் அவர் கூறினார். அதேசமயம் , தரம் 5க்கான புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் அக்டோபர் 16ஆம் திகதி இடம்பெறும் எனவும் குறிப்பிட்டார்.

அதேபோல், 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை எதிர்வரும் அக்டோபர் 17ஆம் திகதி முதல் நவம்பர் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

பரீட்சைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு!
Previous articleமக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான தொழிற்சங்கங்களின் ஆதரவை நான் பாராட்டுகின்றேன்: பிரதமர்
Next articleஉண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தேரர் மருத்துவமனையில் அனுமதி!