யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விபத்தில் சிக்கியுள்ளனர்.

இதில் 11 வயது மகள் உயிரிழந்த நிலையில், தந்தையும் மற்றுமொரு மகனும் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 44 வயதுடைய தந்தை மற்றும் 16 வயதுடைய மகன் ஆகியோரே காயமடைந்துள்ளனர். படுகயமடைந்தவர்கள் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொடிகாமம் புகையிரத கடவையில் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக்காலமாக வட மாகாணத்தில் இவ்வாறான விபத்துக்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleவவுனியாவில் நேருக்கு நேர் மோதிய இரு வாகனங்கள்
Next articleயாழில் பொலிஸ் நிலையத்தில் கழுத்தையருத்து தற்கொலைக்கு முயன்ற இளைஞன்