கண்களை மூடசொல்லிவிட்டு இளைஞனின் கழுத்தை அறுத்த பெண்

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் பெண்ணொருவர் தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட இளைஞரை கண்களை மூட சொல்லி அவரது கழுத்தை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் அல்லூரி சித்தராமராஜு மாவட்டத்தை சேர்ந்தவர் ராமு நாயுடு. இவருக்கும் அனகப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்த புஷ்பா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இந்த நிலையில், ராமுவை சாய்பாபா மலைக்கு புஷ்பா அழைத்து சென்றுள்ளார். அங்கு அவருக்கு சர்ப்ரைஸ் தருவதாக கூறி கண்களை மூட சொல்லியுள்ளார்.

ராமுவும் ஆச்சரியத்தை எதிர்நோக்கி கண்களை மூடியபோது, புஷ்பா அவரது கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ராமு வலியால் அலறித் துடித்தார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ராமுவின் உடல்நிலை மோசமாக இருப்பதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார் புஷ்பாவை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்றும், அதனால் தான் ராமுவின் கழுத்தை அறுத்ததாகவும் அதிர்ச்சியளித்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இளம்பெண் புஷ்பாவின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன.

Previous articleமின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு
Next articleயாழில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர்கள்