யாழில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர்கள்

தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் அசாதாரண சூழ்நிலைகளில் வெளிக்கொணரும் முகமாக இரத்தக்கரை மற்றும் அரை நிர்வாண ஆடைகளுடன் வலி. தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

தவிசாளர் ஜெபநேசன் தலைமையில் இன்று(22) காலை மாதாந்த சபை கூட்டம் நடைபெற்றது.

இதன்போது இன நல்லிணக்கத்தினை பிரதிபலிக்கும் முகமாக பிரதேசசபை உறுப்பினர் ரமணன் அவர்கள் சிலுவையில் இந்துக்களின் காவி உடையை கட்டி மத நல்லிணக்கத்தினை சித்தரிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும் கோட்டாபய ராஜபக்சவின் உருவ பொம்மையும் பிரதேச சபை உறுப்பினர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் வெற்று எண்ணை கொள்கலன்களுடன் கலந்து கொண்டிருந்தனர்.

தொடர்ந்து சபை கூட்டத்தின்போது சண்டிலிப்பாய் வட்டார உறுப்பினர் ஜெசி அரை நிர்வாண ஆடைகளுடன் கலந்து கொண்டதுடன் ,அதற்கு விளக்கமாக தற்சமயம் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் அரைநிர்வாணமாக திரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதனை சித்தரிக்கும் வகையிலேயே தாம் அரை நிர்வாண ஆடைகளுடன் இன்றைய மாதாந்த அமர்வில் கலந்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

Previous articleகண்களை மூடசொல்லிவிட்டு இளைஞனின் கழுத்தை அறுத்த பெண்
Next articleறம்புக்கணயில் உயிரிழந்தவரின் உடல் அவரது இலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது (Photo)