அவுஸ்திரேலியாவில் கல்வி பயின்று வந்த இலங்கை மாணவன் பலி

அவுஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயின்று வந்த இலங்கை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் அத்தனகல்ல, வல்பொல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய இசுரு ஜீவந்த என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த இலங்கை மாணவன் பயணித்த கார் விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாணவன் உயர்தர கணிதப் பிரிவில் கம்பஹா மாவட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்று மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு தேர்வாகி இருந்த நிலையில்,மேற்படிப்புக்காக அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார்.

உயிரிழந்தவரின் உடலை இலங்கைக்கு கொண்டு வர அவரது நண்பர்கள் நிதி திரட்டி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Previous articleபொருளாதார ரீதியான ஆதரவை வழங்குவதாக மகிந்தவிடம் உறுதிமொழி வழங்கிய சீனா
Next articleகொலைகாரக் கோட்டாவை விரட்டும் வரை ஓயாதீர்கள் : மக்களிடம் சந்திரிகா வேண்டுகோள்