நாளை மின்தடை தொடர்பில் வெளியான அறிவிப்பு!


நாட்டில் இன்றும்,நாளையும் மின்சாரத்தை துண்டிப்பதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, நாளைய தினம் 3 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, காலை 9 மணிமுதல் மாலை 5.20 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும், மாலை 5.20 முதல் இரவு 9.20 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleயாழில் பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம் மீட்பு!
Next articleமட்டக்களப்பில் உயிரிழந்த இளம் ஊடகவியலாளர்