இலங்கையின் துறைமுகத்தை சீனா கைப்பற்றியது என அம்பலப்படுத்திய அவுஸ்திரேலியா


இலங்கையில் உள்ள துறைமுகத்தை கட்டியமைப்பதில் சீனாவிடம் இருந்து கடனை செலுத்த முடியாததால், அந்த துறைமுகத்தை சீனா கைப்பற்றியது என்று அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

சீனாவால் நிர்மாணிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகம் தற்போது இலங்கையுடன் இணைந்து சீனர்களால் நிர்வகிக்கப்பட்டு வருவதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் டட்டன் இதனை தெரிவித்துள்ளார். .

இந்தநிலையில் சீனா உட்பட ஒவ்வொரு நாட்டுடனும் அமைதியான உறவை அவுஸ்திரேலியா விரும்புகிறது.

எனினும் சீனா மாறுப்பட்ட விதத்தில் செயற்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சீனாவிற்கும் சாலமன் தீவுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தின்கீழ் சீனாவின் இராணுவ முகாம் என்று அமைக்கப்படவுள்ளது.

இந்தநிலையில் அவுஸ்திரேலியா அதனை தடுக்கவில்லை என்று குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள ஸ்கொட் மொரிசன், இந்த ஒப்பந்தத்தின் கீழ் எந்த சீன கடற்படை தளங்களையும் அனுமதிக்கப்போவதில்லை என்று சாலமன் தீவுகள் அரசாங்கம் கூறியதாக தெரிவித்துள்ளார்.

Previous articleமட்டக்களப்பில் உயிரிழந்த இளம் ஊடகவியலாளர்
Next articleபிரதமர் பதவிக்கு இவர்களில் ஒருவரே நியமிக்கபடுவார்கள்!