என்ன நடந்தாலும் பதவியை விட்டு விலகமாட்டேன் : மகிந்த ராஜபக்சே!வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியின் விளைவாக, இலங்கையில் அத்தியாவசியப் பொருட்கள் முதல் தங்கம் வரை அனைத்தின் விலையும் விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்துள்ள அந்நாட்டு மக்கள் அதிபர், பிரதமர். நிதியமைச்சர் என அனைத்த ராஜபக்சேக்களையும் பதவி விலக வலியுறுத்தி வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். அத்துடன் இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகளும் இதற்கான முயற்சியை தொடர் மேற்கொண்டு வருகின்றன.

ஆனால் எந்த காரணம் கொண்டும் பதவியில் இருந்து விலகமாட்டேன் என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே அண்மையில் திட்டவட்டமாக அறிவித்திருந்தார். வேண்டுமானால் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவியில் இருந்து விலகலாம் என்று சமீப காலமாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் தாமும் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என்று மகிந்த ராஜபக்சே அறிவித்துள்ளார்

Previous articleபிரதமர் பதவிக்கு இவர்களில் ஒருவரே நியமிக்கபடுவார்கள்!
Next articleஎதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு!