இலங்கையின் பிரபல விமான சேவைக்கு வந்த சிக்கல்!


ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் 24 விமானங்கள் அடுத்த ஒரு வருடத்திற்குள் 11 விமானங்களாக குறைக்கப்படும் என விமான சேவையின் ஸ்ரீலங்கன் சுதந்திர ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால் சர்வதேச விமான நிறுவனங்களுடன் ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் போட்டியிட முடியாது நிலைமை ஏற்படும் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான 24 விமானங்களில் எட்டு விமானங்களின் பயணிக்கும் கால எல்லை அடுத்த ஆண்டு காலாவதியாகும் எனவும், தற்போதைய தினசரி அட்டவணையைப் பராமரிக்க விமானங்களைப் பெறுவது கட்டாயமாகும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
பல வர்த்தக விமானங்களை ஒரே நேரத்தில் பெற்றுக் கொள்ள முடியாது என்பதால், குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாக விண்ணப்பம் செய்வதன் மூலம் சந்தையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என ஸ்ரீலங்கன் சுதந்திர ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்களை கொள்வனவு செய்ய தயாராகி வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் போதே சங்கத்தின் உறுப்பினர்கள் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.


Previous articleமேலும் பல இலங்கையர்கள் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்
Next articleகோட்டா எமக்கு வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு குழு