பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு : குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை!


எதிர்வரும் காலங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் சிறிதளவு குறைக்கப்படலாம் என  எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்வது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் சிறிதளவு குறைப்பு எதிர்பார்க்கப்படுவதாக அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்திய கடன் திட்டத்தின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்வதை ஆரம்பிக்க முடியும் என குறித்த சங்கத்தின்  பேச்சாளரான நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

டொலர் மதிப்பு உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.   

Previous articleகோட்டா எமக்கு வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு குழு
Next articleஇலங்கையே கண்டிராத அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெறபோகும் மாபெரும் ஆர்ப்பாட்டம்!