கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன் சவப்பெட்டியை எரித்து தமது எதிர்ப்பை தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்!


அரசாங்கத்திற்கு எதிராக ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் 16வது நாளாக தொடர்ந்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்கள் உடன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சவப்பெட்டி மற்றும் மலர்வளையம் ஆகியவற்றை கொண்டுவந்துள்ளனர்.

அண்மையில் றம்புக்கணை பகுதியில் இடம்பெற்ற அரச எரிப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சமிந்த லக்ஷானின் நினைவாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது சவப்பெட்டிக்கு தீ வைத்த போராட்டகாரர்கள், உயிரிழந்த நபருக்கு நீதிகோரி போராட்டம் நடத்தியிருந்தனர்.  Previous articleஅரசாங்கத்திற்கு எதிராக களமிறங்கிய எஸ்.பி. திஸாநாயக்க
Next articleமின்சார கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!