வவுனியாவில் இடம்பெற்று வரும் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு

வவுனியாவில் அண்மைக்காலமாகத் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துச் செல்வதை அவதானிக்க முடிந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் இறம்பைக்குளத்தில் நேற்றையதினம் தனிமையிலிருந்த வயோதிப பெண்ணிடம் கத்தியைக் காட்டி பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இதேவேளை கோவில் குளத்திலும் பெண்ணொருவரிடம் தங்கச் சங்கிலியைத் திருடர்கள் அறுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குருமன்காடு, யாழ் வீதி, இறம்பைக்குளம், கோவில்குளம் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களில் சங்கிலி அறுப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Previous articleஎதிர்வரும் 28ம் திகதி நாடு முழுவதும் முடக்கம்? : வெளியான அறிவிப்பு!
Next articleபொது பணிப்புறக்கணிப்பிற்கு அரச, தனியார் பேரூந்துகள் விடுத்துள்ள அறிவிப்பு