பொது பணிப்புறக்கணிப்பிற்கு அரச, தனியார் பேரூந்துகள் விடுத்துள்ள அறிவிப்பு

அரசாங்கத்துக்கு எதிராக நாளை பொது பணிப்புறக்கணிப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதும் அரச மற்றும் தனியார் பேரூந்துகள் வழமைப்போன்று இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அரச பேரூந்துகள் உரிய சேவைகளை நடத்தும் என்று இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தாமும் நாளையதினம் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக தனியார் பேரூந்து உரிமையாளர் சம்மேளனத் தலைவர் கெமுன விஜயரத்ன எமது செய்திசேவையிடம் தெரிவித்தார்.

எனினும் எதிர்வரும் 6ஆம் திகதி நடத்தப்படவுள்ள தேசிய நிர்வாக முடக்கல் போராட்டத்துக்கு தமது சங்கம் ஆதரவளிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

Previous articleவவுனியாவில் இடம்பெற்று வரும் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு
Next articleறம்புக்கண துப்பாக்கிசூடு சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து பொலிஸார் அதிகாரிகளையும் கைது செய்ய உத்தரவு