றம்புக்கண துப்பாக்கிசூடு சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து பொலிஸார் அதிகாரிகளையும் கைது செய்ய உத்தரவு

றம்புக்கண பகுதியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து பொலிஸாரையும் கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கேகாலை நீதிவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் சட்டவைத்திய பரிசோதனைகளில் அவர்களது காயங்கள் துப்பாக்கி சூட்டினால் ஏற்பட்டது என உறுதிசெய்யப்பட்டது.

இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை உடனடியாக கைது செய்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Previous articleபொது பணிப்புறக்கணிப்பிற்கு அரச, தனியார் பேரூந்துகள் விடுத்துள்ள அறிவிப்பு
Next articleசிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட தமிழ் இளைஞர்!