யாழில் இருந்து தமிழகம் சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகம் சென்ற இரு இளைஞர்கள் மீதும் இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளமையால், அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ்.குருநகர் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் தமிழகம், தனுஷ்கோடியை அண்மித்த தொண்டி பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை தமிழக கடலோர பாதுகாப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.குறித்த இருவரும் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அகதிகளாக தமிழகத்திற்கு தஞ்சம் கோரி வந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, குறித்த இருவருக்கும் எதிராக இலங்கை நீதிமன்றில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதனால் இருவரையும் அகதிகளாக ஏற்காமல் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Previous articleசாதாரணதர பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
Next articleதூக்கில் போட இருந்த தமிழ் இளைஞருக்கு கிடைத்த நிவாரணம்