யாழில் பதுக்கபட்ட அத்தியாவசிய பொருட்கள் மீட்பு !

நாடளாவிய நீதியில் அத்தியாவசிய பொருகள் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்க, யாழ்ப்பாணத்தில் பெருமளவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தீப்பெட்டிகள் எரிவாயு சிலிண்டர்கள் என்பன பாவனையாளர் அதிகார சபையினரால் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட பாவனையாளரிடமிருந்து கிடைக்க பெற்ற எரிவாயு தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் பாவனையாளர் அதிகார சபையினர் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இதன்போது வர்த்தக நிலையத்தில் அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட மற்றும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்கள் பொலிசாரின் உதவியுடன் கைப்பற்றப்பட்டு பாவனையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

அத்துடன் குறித்த வர்த்தகருக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. மேலும் இவ்வாறாக எரிவாயுவினை அதிகூடிய விலைக்கு விற்பனை செய்தல் மற்றும் பதுக்கி வைத்திருத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் பாவனையாளர் அதிகார சபையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Previous articleகுளிக்க சென்ற ஒரே குடும்பத்தைச்சேர்ந்த இரு சகோதரர்கள் நீரில் மூழ்கி பலி
Next articleஇலங்கையில் அதிகரிக்கவுள்ள மின் கட்டணம் : அதிர்ச்சியில் மக்கள்