இலங்கையில் அதிகரிக்கவுள்ள மின் கட்டணம் : அதிர்ச்சியில் மக்கள்

கடந்த 08 வருடங்களுக்கு மேலாக மின்சாரக் கட்டணம் திருத்தப்படாத நிலையில் தற்போது மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டால், பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மேலும் கட்டண உயர்வு தொடர்பில் அரசின் கொள்கை குறித்து ஆராயப்பட்டு வருவதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Previous articleயாழில் பதுக்கபட்ட அத்தியாவசிய பொருட்கள் மீட்பு !
Next articleமஹிந்தவிற்கு எதிராக களமிறங்கிய 1000 தேரர்கள்!