லண்டனிலும் உருவாக்கபட்டது ”கோட்டா கோ கம” நகரம்

லண்டன் நாடாளுமன்றத்திற்கு முன்பாக “கோட்டாகோகம“ எனும் கிளையொன்று லண்டனில் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள இலங்கையர்கள் அரசுக்கு எதிராகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக்கோரியும் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,லண்டன் நாடாளுமன்றத்திற்கு முன்பாக “கோட்டாகோகம“ எனும் பகுதியை உருவாக்கி பதாகைகளை காட்சிப்படுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலி முகத்திடல் வளாகத்தில் 22ஆவது நாளாகவும் போராட்டம் தொடரும் நிலையில், அப்பகுதிக்கு ‘கோட்டா கோ கிராமம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளதுடன்,கூகுள் வழிகாட்டலிலும் அந்த பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Previous articleஎரிபொருள் பௌசர் உரிமையாளர்களின் போராட்டத்தினை உடனடியாக ரத்து செய்யுமாறு அமைச்சர் உத்தரவு
Next articleமட்டக்களப்பில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட 17 வயது சிறுமி