தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்துக்கு ஏற்பாடு

மே 1ஆம் திகதி தொழிலாளர்கள் தினம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மாகாணங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Previous articleஅரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்றவர்களின் மீது பொலிஸார் நடத்திய தாக்குதல்
Next articleமக்களுக்கு இன்பதிர்ச்சி அளித்த லிட்ரோ நிறுவனம்