மதுப்பிரியர்களுக்கு விடுக்கபட்ட மகிழ்ச்சித் தகவல்

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களின் திருத்தியமைக்கப்பட்ட விலைகளை விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மதுபானசாலை உரிமையாளர்களிடம் கலால் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பிட்ட சில நபர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர், கலால் திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம், வாடிக்கையாளர்கள் செய்த முறைப்பாடுகளை ஆராய்ந்ததன் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன்படி திருத்தப்பட்ட விலைகளை காட்சிப்படுத்தத் தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous articleடொலர் நெருக்கடியின் காரணமாக சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதில் சிக்கல் !
Next articleஇலங்கை மக்களுக்கு பிரதமர் மஹிந்த வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி