சனிபகவானின் அதிசார பெயர்ச்சி: எதிர்பாராத திருப்பத்தை அடையப்போகும் இரு ராசிக்காரர்கள் இன்றைய ராசி பலன்கள் – திங்கட்கிழமை மே 2, 2022

மேஷம் நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள் கை கொடுப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கான பணத்தேவை பூர்த்தியாகும். புதிய ஆர்டர்கள் பெருவதற்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். கணவன் மனைவி இடையே சுமூகமான நிலை நிலவும். பணவரவு எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும்.மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவார்கள்.

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். சிலரின் தவறான செயல்களை நினைத்து வருந்துவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

மிதுனம்: விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். உடல் அசதி சோர்வு வந்து விலகும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் விவாதம் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

கடகம்: பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். புதிய கோணத்தில் இருந்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிறப்பான நாள்.

சிம்மம்: உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கடமை உணர்வுடன் செயல்படும் நாள்.

கன்னி: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்திருந்த தொகை, கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.

துலாம்: சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் பனிப்போர் வந்து நீங்கும். கவனம் தேவைப்படும் நாள்.

Previous articleகாலம் கடந்து விட்டது கையை மீறிய இலங்கை கோட்டாபயவிடமே இறுதி முடிவு
Next articleகொழும்பில் வீதிக்கு இறங்கி வாகனத்திற்கு தீ வைத்த பொதுமக்கள்