அரசாங்கத்திற்கு எதிராக முகநூலில் கருத்தை பதிவிட்ட தம்பதியின் மீது இடம்பெற்ற தாக்குதல்

தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக முகநூலில் கருத்து பதிவிட்டமைக்காக கணவன், மனைவி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த தாகுதலில் காயங்களுக்குள்ளான தம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதலில் கிரிந்திவெல – மாலிகாவத்த பிரதேசத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில், ஏற்பட்டுள்ள மருந்துத் தட்டுப்பாட்டால் தமதுப் பிள்ளைக்கு மருந்து பொருள்களைக் கொள்வனவு செய்ய முடியவில்லை என்கிற ஆத்திரத்தில் அரசாங்கத்துக்கு எதிராக முகநூலில் பதிவிடப்பட்ட பதிவொன்றுக்காகவே கணவனும், மனைவியும் தாக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலகவின் இளைய சகோதரரே இவ்வாறு தங்களை வீடு புகுந்து தாக்கியுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleகொழும்பில் வீதிக்கு இறங்கி வாகனத்திற்கு தீ வைத்த பொதுமக்கள்
Next articleஇனி கொராணா தடுப்பூசி கட்டாயம் இல்லை : வெளியான அறிவித்தல்