நியூஸிலாந்திடம் பால் கடன் கேட்ட இலங்கை

இலங்கையில் பால் மற்றும் விலங்கு பொருட்களுக்கு சலுகைக் கடன் திட்டங்களை வழங்க நியூசிலாந்து முன்வந்துள்ளது.

நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மற்றும் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் பொருளாதார மற்றும் அபிவிருத்தி உறவுகளை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

Previous articleஇனி கொராணா தடுப்பூசி கட்டாயம் இல்லை : வெளியான அறிவித்தல்
Next articleஅரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் 120 பேர் கையொப்பம்!