அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் 120 பேர் கையொப்பம்!

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் இதுவரையில் 120 பேர் கையொப்பமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake) தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்த வாரம் அளவில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் (Mahinda Yapa Abeywardena) கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ள சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இதற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous articleநியூஸிலாந்திடம் பால் கடன் கேட்ட இலங்கை
Next articleயுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் புகைப்படம் தாங்கி காலி முகத்திடலில் போராட்டம்