யாழ். கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் மரணம்

யாழ்.தென்மராட்சி, கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் கொடிகாமம் – கச்சாய் வீதியைச் சேர்ந்த யோகேஸ்வரன் நிலாந்தன் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற கப் ரக வாகனமும், யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் புகைப்படம் தாங்கி காலி முகத்திடலில் போராட்டம்
Next articleயாழில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் விளக்கு வெளிச்சத்தில் படித்த சிறுமி பரிதாபமாக பலி