யாழில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் விளக்கு வெளிச்சத்தில் படித்த சிறுமி பரிதாபமாக பலி

யாழ்ப்பாணத்தில் விளக்கு வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவி தீ விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

சண்டிலிப்பாய் பகுதியில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் சிறுமி விளக்கு வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் விளக்கு கீழே விழுந்து அறையினுள் தீப்பற்றியமையினால் மாணவி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சுதர்ஷனி சதுர்ஷிகா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வீட்டில் தந்தை கொண்டு வந்த பெட்ரோல் போத்தல் தீப்பிடித்து எரிந்ததில் சிறுமி உடல் கருகி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் சங்கானை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழ். கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் மரணம்
Next articleஇலங்கை அகதிகள் முகாமில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்