யாழில் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்த 3 வயது சிறுவன்

யாழ்ப்பாணம் ஊரெழுவில் இரட்டை சிறுவர்களில் ஒருவர் வீட்டுக் கிணற்றில் தவறி வீழ்ந்த 3 வயது பாலகன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊரெழு மேற்கில் நேற்று மாலை 4 மணியளவில் இந்தச் துயர சம்பவம் இடம்பெற்றது. சம்பவத்தில் இரட்டையர்களில் ஒருவரான கிருஷ்ணகாந்தன் சித்தாத் (வயது-3) என்ற பாலகனே உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து தெரியவருகையில்,

இரட்டை குழந்தைகள் இருவரும் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். இஅதன்போது அவர்களுக்கு பிஸ்கட் கொடுத்துவிட்டு தாயார் தேனீர் தயாரிக்க சமையலறைக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் தாயார் மீள வந்து பார்த்த போது பாலகன் ஒருவரைக் காணவில்லை.

வீட்டு வளவில் தேடிய பின் கிணற்றை பார்த்த போது பாலகன் கிணற்றில் தவறி வீழ்ந்தமை கண்டறிப்பட்டது. இதனையடுத்து உடனடியாக மீட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதும் பாலகன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் வீட்டில் அமைந்துள்ள கட்டுக் கிணற்றை சுற்றி தகரத்தினால் வேலியிடப்பட்டுள்ளது. அதில் ஏறிய போதே பாலகன் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்திருக்கலாம் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Previous articleகாலிமுகத் திடலில் இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்
Next articleஇலங்கையில் இருந்து அகதியாக தமிழகம் வந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற பொலிஸார்