முல்லைதீவில் குளத்தில் மிதந்து வந்த சடலம்

முல்லைத்தீவு – தீர்த்தக்கரை, வேளாங்கன்னி ஆலயத்திற்கு அருகில் உள்ள கொட்டுறுட்டி குளத்தில் நபர் ஒருவரின் சடலம் மிதப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் கிராம சேவையாளருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த நபர் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னதாக உயிரிழந்திருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றார்கள்.

சடலத்தினை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ள நிலையில் உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

Previous articleநாட்டின் பல்வேறு பகுதிகளில் தனியார் பேருந்துகள் சேவை ரத்து!
Next articleஅரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்த பொலிஸாருக்கு நேர்ந்த நிலை