எதிர்பாராத விதமாக 7வது மாடியிலிருந்து கீழே விழுந்த குழந்தை : கதறும் குடும்பம்!!

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி வினிதா. விஜயகுமார் ஓராண்டுக்கு முன்பு உயிரிழந்தை அடுத்து தனது 2 வயது பெண் குழந்தையுடன் சென்னை ஓட்டேரி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த சோபாவில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த ஜன்னலை குழந்தை எட்டிப்பார்த்திருக்கிறது. எதிர்பாராத விதமாக 7வது மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் கீழே சென்று பார்த்தபோது குழந்தை ரத்த வெள்ளத்தில் இருந்தது.

பிறகு குழந்தையை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 7வது மாடியின் வீட்டு ஜன்னலிலிருந்து தவறி விழுந்த குழந்தைக்கு உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleபெற்றோர்கள் கூறியதை மீறி ஏரிக்கு சென்ற பள்ளி மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்!!
Next articleதமிழ்நாட்டில் ஆசிரியர்களை தாக்கும் மாணவர்கள்