ஆர்ப்பாட்டக்களத்தில் நபர் ஒருவருக்கு சாமி வந்ததால் பரபரப்பு !

அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந் நிலையில் இன்று நாடாளுமன்ற வாளகத்திற்கு அருகில் வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டு பொலிஸ் பாதுகாப்பும் குறித்த பகுதியில் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கு பொதுமகன் ஒருவர் அருள் வந்தது போல் நடந்து கொள்ளும் காட்சி ஒன்று கமராவில் பதிவாகியுள்ளது.

நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறுவதனால் வீதிகள் தடைப்பட்டிருக்கும் என்று பொலிஸ் தலைமையகம் இன்று அறிவித்திருந்த நிலையில் தற்போது மாணவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக தமது போராட்டத்தை இப் பகுதியை நோக்கி முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்பகுதியில் பொலிஸார் கலவரங்களை தடுப்பதற்கான முன்னாயத்த பணிகளில் ஈடுபடும் போதே இவ்வாறான காட்சி ஒன்றும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleநாடளவிய ரீதியில் இடம்பெற்று வரும் முழு அடைப்பு போராட்டம் : பொலிஸார் விடுத்துள்ள விசேட கோரிக்கை
Next articleஇராஜினாமா செய்ய உறுதியளித்தார் மஹிந்த – அடுத்தவாரம் புதிய அமைச்சரவை!