யாழில் மூதாட்டி ஒருவரை வெட்டிக்கொலை

யாழ்ப்பாணம் -தெல்லிப்பழை – வித்தகபுரம் பகுதியில் தனிமையில் இருந்த மூதாட்டி மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த மூதாட்டியிடம் கொள்ளையிடுவதற்காக சென்றிருந்த சிலர், தாக்குதலை மேற்கொண்டு தப்பிச்சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த மூதாட்டி தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

டீசல் தட்டுப்பாடு காரணமாக நாளை முதல் பஸ்களை இயக்க முடியாது எனவும் எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு இந்நிலை தொடரும் எனவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் விநியோகிக்கப்படவில்லை எனவும் இதனால் நாளைய தினம் பெரும்பாலான பேருந்துகளை இயக்க முடியாது எனவும் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று நடத்தப்படும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக நேற்று நண்பகல் 12.00 மணி முதல் இன்று நள்ளிரவு 12.00 மணி வரை பேருந்து சேவையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு இம்மாதம் 12ஆம் திகதி வரை தொடரும் என CPC அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்தும் டீசல் தட்டுப்பாடு நிலவி வருவதால், பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கு டீசல் வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு போக்குவரத்து அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாததால், பேருந்துகளுக்கு தேவையான எரிபொருளை உரிய முறையில் பெற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous articleபப்ஜி விளையாட்டிற்கு அடிமையான குடும்பஸ்த்தர் தற்கொலை
Next articleமன்னாரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் சுகாதாரத்துறையினர்