க.பொ.த உயர் தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்

க.பொ.த உயர் தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சி (சிங்கள/தமிழ்) நடைமுறைப் பரீட்சைகளில் இன்று (06) தோற்ற முடியாமல்போன பரீட்சார்த்திகள் உரிய பரீட்சை நிலையங்களுக்குச் சென்று தங்களின் நடைமுறைப் பரீட்சைகளுக்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Previous articleமன்னாரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் சுகாதாரத்துறையினர்
Next articleஅரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்களால் மேற்கொள்ளபட்ட உள்ளாடை போராட்டம்