க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு (Photo)

2021ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 23ஆம் திகதி சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அத்துடன், க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி நிறைவடையவுள்ளது.

கணிப்பான்கள் மற்றும் பேனா எழுத்துக்களை அழிப்பதற்கான வெள்ளை திரவம் என்பவற்றை பயன்படுத்துவதற்கு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கையடக்கத் தொலைபேசிகள் உட்பட இலத்திரனியல் உபகரணங்களை இந்த பரீட்சை மண்டபத்திற்கு கொண்டு வருதல் தண்டனைக்குரிய குற்றம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை பரீட்சை அனுமதி அட்டைகள் எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன் கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு சிக்கல்கள் மற்றும் பிற பிரச்சினைகள் உள்ள மாணவர்கள் 011-2784208, 011278453, 011-3188350, 011-3140314, 1911 என்ற இலக்கங்களை தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleகிளிநொச்சி – செல்வாநகர் கிராமத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு (Photos)
Next articleயாழில் உள்ள மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவித்தல்