யாழில் உள்ள மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவித்தல்

சமூக மற்றும் குடும்ப வன்முறைகளில் ஈடுபடாதிருக்கவும், மதுபானம் போதைப்பொருள் பாவனைகளால் தாமாக நோயேற்படுத்தும் தன்மையைத் தவிர்த்து சுகாதார சேவைக்கு ஒத்துழைக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் யாழ். மாவட்ட மக்களுக்கு அவசர அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையில் மருந்துகளின் தட்டுப்பாடு மேலும் அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும்,

சேலைன் முதற்கொண்டு அத்தியாவசிய மருந்து பொருட்களின் கையிருப்பு மிகவும் குறைந்து சென்றுள்ளதுடன் தேசிய மருந்து தட்டுப்பாடு அபாய நிலை காரணமாக சத்திர சிகிச்சை செயற்பாடுகளை பாரிய அளவில் மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உயிர் காக்கும் அவசர சிகிச்சைகளும், அவசர நரம்பியல் சத்திர சிகிச்சைகளும், கர்ப்பிணித் தாய்மார்களிற்கான அவசர சத்திர சிகிச்சைகளும் மட்டுமே நடைபெறும்.மேலும் சில சத்திர சிகிச்சை கூடங்கள் தற்காலிகமாக மூடப்படுகின்றன. இந்த நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு மக்கள் அனைவரையும் ஒத்துழைக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.

அநாவசிய பயணங்களை குறைப்பதாலும் மட்டுப்படுத்திய வேக கட்டுப்பாட்டுடன், சிரத்தையான வாகன செலுத்துகைகளை மேற்கொண்டு வீதி விபத்துக்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

சமூக மற்றும் குடும்ப வன்முறைகளில் ஈடுபடாதிருக்கவும், மதுபானம் போதைப்பொருள் பாவனைகளால் தாமாக நோயேற்படுத்தும் தன்மையைத் தவிர்த்து சுகாதார சேவைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleக.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு (Photo)
Next articleயாழில் மின்சாரசபை பொறியியலாளர் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் புகார்