வவுனியாவில் பிரபல ஆடைத்தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியில் டயர் எரிப்பு!

வவுனியா இராசேந்திரகுளம் பகுதியில் இயங்கிவருகின்ற ஆடைத்தொழிற்சாலையின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியில் ரயர் எரித்த சம்பவமொன்று இன்று (06.05.2022) காலை இடம்பெற்றுள்ளது.

மாவட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிராக பூரண கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் வர்த்தக நிலையங்கள் , மொத்த மரக்கறி விற்பனையகம், தபாலகம், வங்கிகள் என்பன மூடப்பட்டு மக்கள் அரசாங்கத்திற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த ஆடைத்தொழிற்சாலை இன்று இயங்கிய நிலையில் அதனை மூடுமாறு தெரிவித்து ஆடைத்தொழிற்சாலைக்கு செல்லும் பாதையில் இவ்வாறு ரயர் எரிக்கப்பட்டுள்ளது.

Previous articleமன்னார் கடல்படுகையில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் பொக்கிஷம்
Next articleயாழில் சிறையில் இருந்த கைதி திடீர் மரணம்